பிரதமர் ஹரிணி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்! அரசாங்கத்தின் அறிவிப்பு
கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்காக நாடாளுமன்றத்தில் இரண்டு முழு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அறிவித்துள்ளது.
ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் விவாதம் திட்டமிடப்பட்டுள்ளது, தேவைப்பட்டால் விவாதத்தை நீட்டிக்கும் வாய்ப்பு உள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள்
“இந்த விவாதத்திற்காக ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய திகதிகளை நாங்கள் ஏற்கனவே ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

தற்போது, இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, ஆனால் தேவைப்பட்டால், அதை மேலும் நீட்டிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விவாதத்தை முழுமையாக நடத்துவதே எங்கள் எதிர்பார்ப்பு.
பிரதமருக்கு எதிரான இந்தப் பிரேரணையை எதிர்க்கட்சி வலியுறுத்தினால், கல்வி சீர்திருத்தங்கள் குறித்த உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு முன்வைக்க அது வாய்ப்பளிக்கும், ”என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |