கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழுவின்(கோப்) தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை தாக்கல் செய்யவுள்ளது.
இந்த பிரேரணை எதிர்வரும் (20)ந் திகதி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் ரஞ்சித் பண்டாரவுக்கு இடையேயான தொடர்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் குற்றம் சாட்டியிருந்தது.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்த நிலையில், அவரை கோப் குழுவின் தலைவராக வைத்து கிரிக்கெட் நிறுவனம் பற்றிய விசாரணைகளை நடத்துவது ஆக்கபூர்வமானதல்ல என அந்த கட்சியினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதையடுத்து, ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், அது தொடர்பான பேச்சுக்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த பிரேரணை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |