கோட்டாபயவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை! செவ்வாயன்று விவாதம்
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Gota Go Gama
Motion of no confidence
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்வைத்துள்ளனர்.
புதன்கிழமை (11) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முடிவில்லாமல் நிறைவடைந்த நிலையில் தற்போதைய நெருக்கடிகளுக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் இரண்டாவது நாளாக நேற்று கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்