நாடாளுமன்றில் விவாதத்திற்கு வரும் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்றும் நாளையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் (19) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும், நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற பதில் பொதுச் செயலாளர் ஹன்ச அபேரட்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் மற்றும் காவல்துறை மா அதிபர் நியமனம் ஆகிய சந்தர்ப்பங்களில் சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளினால் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. விவாதங்களின் பின்னர் நாளை மாலை நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
[
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |