திலீபனின் சிலையை நிறுவியதற்கும் எமது கட்சிக்கும் எவ்வித தொடர்புமில்லை: கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு
தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் தமது கட்சி மீது சமூக ஊடகங்களில் திட்டமிட்டு விமர்சனங்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
தியாகதீபம் திலீபனின் நினைவுச் சிலையை அமைக்கும் பணியைத் தங்களது கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னின்று செய்யவில்லை எனவும் ஐ.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அடித்துக் கூறியுள்ளார் கஜேந்திரகுமார்.
எனினும், அந்தச் சிலையை யார் செய்திருந்தாலும், திலீபனுக்கென ஏற்கனவே முறைப்படி அனுமதி பெற்று ஒதுக்கப்பட்ட அந்தப் புனிதமான இடத்தில், அவரது சிலையை நிரந்தரமாக வைப்பதற்கு எடுத்த முயற்சி முற்றிலும் சரியானது என்றும், அதில் எந்தத் தவறும் இல்லை என்பதே தங்களது உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற வெட்கமில்லாத கட்சிகள், தாயகத்தில் தங்களுக்குப் பெரிய அரசியல் வெற்றி கிடைத்துவிட்டது போலப் பெருமை பேசிக் கொள்வதற்காக மட்டுமே இந்த நினைவுகூரல்களைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தியாகதீபம் திலீபன் சிலை அகற்றல் விவகாரத்தை எதிர்க்கும் முகமாக பல இடங்களில் தங்களை முன்னிலைப்படுத்தி செய்தது, சுய இலாப அரசியல் என சிலர் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு கஜேந்திரகுமார் பின்வருமாறு பதில் வழங்கியுள்ளார்..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |