டொலர் இல்லை - கடலில் தத்தளிக்கும் எரிவாயு கப்பல்கள் - மீண்டும் ஏற்படவுள்ள தட்டுப்பாடு
srilanka
dollar
shortage
gas ships
By Sumithiran
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு தொகை எரிவாயுவை விடுவிக்க தேவையான டொலர் தொகை இன்று கிடைக்காவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 6,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை விடுவிப்பதற்கு தேவையான 1.2 மில்லியன் டொலர்களை இலங்கை மத்திய வங்கி விடுவிக்கவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயுவை ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் தற்போது கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
நிறுவனத்திடம் தற்போது சுமார் 2,000 மெட்ரிக் தொன் எரிவாயு மீதமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்