அதிபர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா--! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
Bandula Gunawardane
Sri Lanka
Election
By Jaso
எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலையோ அல்லது வேறு எந்தத் தேர்தலையோ அரசாங்கம் ஒத்திவைக்காது என்றும், ஒவ்வொரு தேர்தலும் திட்டமிட்ட திகதியில் சட்டபூர்வமாக நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
சந்தேகம் வேண்டாம்

இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்