அதிபர் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
Parliament of Sri Lanka
G. L. Peiris
Sri Lanka
Sri Lankan Peoples
By Dhilak
அரசாங்கம் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாவலிலுள்ள சுதந்திர மக்கள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய அதிபர்
மேலும் அவர் கூறுகையில், “புதிய அதிபர் அடுத்த வருடம் நவம்பர் மாதம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

பல்வேறு பொய்யான காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்தாலும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது” என்றார்.