பாரம்பரிய சைவ விழுமியங்களை அவமதித்த பிள்ளையான்!
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பந்தலகுனவர்த்தன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சி. சந்திரகாந்தன் உட்பட அவருடைய அடிவருடிகள் கொக்கட்டி சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு மேலங்கியை கழட்டாமல் ஆலய தரிசனம் செய்வது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
காலாகாலமாக பாரம்பரிய சைவ விழுமியங்களாக மட்டக்களப்பில் உள்ள பிரபல ஆலயங்களில் ஆண்கள் மேல் அங்கியை கழட்டி விட்டு ஆலயத்துக்குள் செல்வது பாரம்பரியமாக நடந்து வருகின்றது.
கிழக்கை மீட்போம் மட்டக்களப்பை அபிவிருத்தி மலையில் கொண்டு செல்வோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அராஜக செயலில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் நான் தான் மட்டக்களப்பின் தலைவன் என்ற ரீதியில் பல சட்ட விரோதமான நடவடிக்கையிலும் மதங்களை அவமதிக்கும் நடவடிக்கையிலும் ஊடகவியலாளர்களை பழிவாங்கு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை கடந்த சில தினங்களாக பேசி பொருளாக மாறி இருக்கின்றது.
மக்களின் அருவருப்பு
மட்டக்களப்புக்கு வருகை தந்த அமைச்சருடன் மாமிசங்கள் உண்டு அதன்பின் ஆலய விழுமியங்களை அவமதித்து அதை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் கடும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையிலிருந்து கொண்டு வந்த கைவிலங்கை காட்டி மக்களை ஏமாற்றி அனுதாப வாக்கில் நாடாளுமன்றம் சென்ற சந்திரகாந்தன் இன்று அவருக்காக வாக்களித்த மக்கள் மத்தியிலும் அடாவடித்தனத்தை கட்டவிழ்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
தங்களுக்கு எதிராக சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுபவர்களை தான் நடத்தும் ஆயிரக்கணக்கான போலி முகநூல்கள் மூலம் மிகவும் கீழ்த்தரமான முறையில் பெண்கள் பிள்ளைகள் போன்றோர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அடிமட்ட செயல்களிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றார் .
தான் ஆயிரம் போலி முகநூலுக்கு சொந்தக்காரர் என்பதை கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சில ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட போதும் அவரது வாயால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.