ரணிலுடனான தீர்வு பேச்சு - நம்பிக்கை இழந்த தமிழர் தரப்பு
75 ஆவது சுதந்திர தினத்திற்குள் தீர்வை வழங்குவதாக உறுதி அளித்த போதிலும், இதுவரை அதற்கான எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத அதிபர் ரணில் விக்ரமசிங்க சமஷ்டி தீர்வை வழங்குவார் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
காலத்தை கடத்தும் நடவடிக்கை
அதிபருடன் தமிழ் தேசியக் கட்சிகள் நடத்தும் பேச்சுக்கள் காலத்தை கடத்தும் நடவடிக்கையாகவே நாம் கருதுகிறோம்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்களை நான் நிராகரிக்கின்றேன்.
யார் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படையாக அவர் கூற வேண்டும்.
எம்மை பொறுத்த வரையில் 13ஆம் திருத்தம் அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” - என்றார்.