அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை! மகிந்த திட்டவட்டம்
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Rajapaksa Family
By Dharu
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி இன்று காலை (04) கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு புனித பல் எச்சத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது இந்த அறிக்கையை வெளியிட்டார்.
மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தான் இந்த நாட்டிற்கு ஆற்றிய சேவை போதுமானதாக இல்லை என்று உணர்வதாகக் கூறினார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தல்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்பும் ஒரு தலைவர் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவை மக்கள் விரும்பும் நிலை வந்தால் அவரையே அந்த தேர்தலில் களமிறக்குவதாகவும் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி