அரசியல் கைதிகளின் விடுதலை: சஜித் தரப்பின் நிலைப்பாடு
By Harrish
அரசியல் கைதிகளை தேசிய மக்கள் சக்தி அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஊடங்களிடம் கூறியதாவது, "சிறைச்சாலைகளில் தற்போது குறைந்தளவு அரசியல் கைதிகளே உள்ளனர் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.
அரசியல் கைதிகள்
எனவே, அவர்களை இந்த அரசு விடுதலை செய்ய எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு எமது கட்சியின் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அரசியல் கைதிகளை மிக விரைவில் விடுதலை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி