அரசின் பெரும்பான்மையை எவராலும் இல்லாதொழிக்க முடியாது!!
Go Home Gota
Parliament of Sri Lanka
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Nalaka Godahewa
By Kanna
அரசாங்கத்தின் பெரும்பான்மையை எவராலும் இல்லாதொழிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 39 பேரை தவிர வேறு எந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக அறிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை காணப்படும் வரை ஆரப்பாட்டங்களின் ஊடாக அரச தலைவரையும் பிரதமரையும் பதவி விலகுமாறு கோர முடியாது.
அதனுடன் தொடர்புடைய எந்தவொரு நடவடிக்கையாயினும் அதனை நாடாளுமன்றத்தினுள் அரசியலமைப்பின் ஊடாகவே முன்னெடுக்க முடியும். நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கான இறுதி முடிவு நாடாளுமன்றத்திலேயே காணப்படுகிறது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி