மொட்டுக் கட்சி இன்றி யாரும் அதிபராக முடியாது - ரோஹித பகிரங்கம்..!
காட்டு சட்டத்தை இல்லாதொழித்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் அதிபர் தேர்தலில் எந்த தரப்பினராலும் வெற்றி பெற முடியாது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறை தொடர்பில் எடுத்த தவறான தீர்மானத்தினால் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது. சேதன பசளை திட்டம் சிறந்து.
இருப்பினும் ஒரே கட்டத்தில் இரசாயன உர பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் சேதன பசளை திட்டம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
சேதன பசளை திட்டம் தொடர்பில் தவறான ஆலோசனைகளை வழங்கிய துறைசார் நிபுணர்கள் இன்று ஒன்றும் அறியாதவர்களை போல் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுகிறார்கள். காலம் அவர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய மேலதிக தகவல்களையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
