இன்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது - மின்சார சபை அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான முடிவு அறிவிக்கப்படும் வரை மின்வெட்டு இடம்பெறாது என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.
இந்த வழக்கு நாளை (பெப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அவமதிப்பு வழக்கு
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பை மீறி மின்வெட்டு - மக்களுக்கு ஏமாற்றம் |
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17 வரையான உயர்தரப் பரீட்சைக்கான காலப்பகுதியில் தொடர்ச்சியான மின்விநியோகம் தொடர்பில் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த தீர்வை நிறைவேற்றத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.