மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பை மீறி மின்வெட்டு - மக்களுக்கு ஏமாற்றம்
இன்று (25) மாலை 6 மணி முதல் முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்ட போதிலும் நாட்டின் பல பாகங்களிலும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் பின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உட்பட அனைத்து தரப்பினரும் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணங்கியுள்ளதாகவும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) இன்று மாலை அறிவித்திருந்தது.
அறிவிப்பை மீறி மின்வெட்டு
ஆனாலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பை மீறி இன்று இரவு 06 மணிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்றையதினம்(24) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றைய தினத்திற்கான மின்வெட்டு அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.