புத்தாண்டு தினங்களில் மின்வெட்டில்லை - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உறுதி
new year
power cut
electricity shortage
no power cut
By Kanna
சித்திரை புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படமாட்டாது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது கிடைக்க பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, நீர் மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நேற்று ஓரளவு மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி