இரணைமடு விவகாரத்தில் பிரதேசவாதம் தூண்டப்படுகின்றதா : சிறீதரன் விளக்கம்
இரணைமடுக்குள விவகாரத்தில் எந்தவொரு பிரதேச வாதமும் தூண்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கிளிநொச்சியிலோ யாழ்ப்பாணத்திலோ எந்தவொரு பிரதேசவாதமும் இல்லை. சிலர் தங்களுடைய அரசியலுக்காக அதனை முன்னெடுக்கின்றார்கள்.
மகாவலித் திட்டத்தினால் திருகோணமலையிலுள்ள தமிழர் பகுதி சேருவல என்று மாற்றப்பட்டது. அத்துடன் மணலாறு வெலிஓயா என்று மாற்றப்பட்டுள்ளது. பாண்டியன்குளம் - துணுக்காய் பகுதிகளில் இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.
அதாவது ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டால் நீரேந்து பிரதேசங்கள், பாவிக்கின்ற மக்கள் அனைத்தும் மத்திக்கு சொந்தம் என்பது அரசியல் நியமத்திலுள்ள விடயங்கள். இதனைப் புரிந்து கொள்ளாமல் சிலர் செயற்படுகின்றனர்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 5 மணி நேரம் முன்