எமக்கும் போராட தான் தோன்றுகின்றது - ஆளும் கட்சி எம்.பி ஆதங்கம்
protest
Dissanayake
srilankan economy
srilankan crisis
By Kanna
அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் மக்கள் அரசாங்கத்தை வெளியேறுமாறு போராடுவது ஆச்சரியமில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏழெட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது எமக்கும் வீதிக்கு இறங்கி போராட தான் தோன்றுகின்றது எனவும் திஸாநாயக்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்தை சபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு அரசு சார்பிலும், பொதுஜன பெரமுன சார்பிலும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி