நோபல் பரிசினை வென்ற விஞ்ஞானிகள் : முக்கிய பங்காளியாக கோவிட்
இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினை இரண்டு விஞ்ஞானிகள் வென்றுள்ளனர்.
எம்ஆர்என்ஏ (mRNA) கோவிட் தடுப்பூசிகளுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளே இந்த விருதுக்கான பாத்திரதாரிகளாவர்.
நோய்ப்பரவலுக்கு முன்
டொக்டர் கட்டலின் கரிகோ மற்றும் டொக்டர் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே இந்த பரிசினைப் பகிர்ந்து கொள்பவர்களாக உள்ளனர்.
இதில் சிறப்பம்சமான விடயம் என்னவென்றால் கோவிட் தொற்று நோய்ப்பரவலுக்கு முன்னரே இந்த தடுப்பூசி சோதனைக்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 2, 2023
The 2023 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Katalin Karikó and Drew Weissman for their discoveries concerning nucleoside base modifications that enabled the development of effective mRNA vaccines against COVID-19. pic.twitter.com/Y62uJDlNMj
கோவிட் தொற்று உலகையே உலுக்கிய பொது இந்த தொழிநுட்பத்தினை மில்லியன் கணக்கான மக்களுக்கு வழங்கி அவர்களது உயிர் காக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.