அடுத்த அழிவுக்கான அறைகூவல் : கொரோனவை விடவும் கொடூரமான வைரஸ் எச்சரிக்கும் சீன விஞ்ஞானி
சீனாவின் புகழ்பெற்ற நுண்ணுயிரியல் விஞ்ஞானி ஷி ஸெங்லி, எதிர்காலத்தில், கொரோனாவைக் காட்டிலும் கொடிய வைரஸ் பரவக்கக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கக்கூடிய வைரஸ்கள் தொடர்பான ஆய்வின் மூலமாக புகழ்பெற்ற விஞ்ஞானியானவர் தான் ஷி ஸெங்லி.
உலகம் முழுவதும் உள்ள அனைவருமே, கொரோனாவை விட அதிக அபாயம் நிறைந்த வைரஸை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக
வூஹானில் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடத்தில், தோற்று நோய்கள் மையத்தின் இயக்குநராக இவர் பணியாற்றுகிறார்.
இவர் கொரோனாத் தொற்று குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார்.
இவரது குழுவினர் இந்த ஆய்வு தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த ஆய்வுக்கட்டுரையில் 40 வகையான கொரோனா வைரஸ்கள் மனித குலத்தை தாக்கவுள்ளதாகவும், அதில் அரைவாசிக்கும் அதிகமானவை மிகவும் அபாயமானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் தொகை அதிகரிப்பு
மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்ற பயங்கரமான நிகழ்வுகள் உலகை உலுக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக இந்த ஆய்வுக் கட்டுரையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகரித்தல், அதேபோல் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் மற்றும் பாதிப்புக்குரிய புதிய வைரஸ்களின் உருவாக்கம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஷி ஸெங்லி தெரிவித்துள்ளார்.
இதில் அதிபயங்கரமான விடயம் யாதெனில், இதுபோன்ற ஆய்வுகளுக்காக, வூஹான் ஆய்வுக்கூடத்தில் மிகவும் மோசமான வைரஸ் இனங்கள் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுவது தான்.
இதன் காரணமாக எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வுக்கூடத்துக்கான நிதியை நிறுத்திவைக்க வேண்டும் என்று அமெரிக்க ஒன்றிய அமைப்பு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.