நொச்சியாகம கொலைச் சம்பவம்: 38 வயதுடைய நபர் கைது
Sri Lanka Police Investigation
Murder
Arrest
By Pavi
அநுராதபுரம், நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நொச்சியாகம காவல்துறை பிரிவில் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நொச்சியாகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், குற்றச்செயலுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம காவல்துறை முன்னெடுத்து வருகின்றனர்.
சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி