அதிபர் வேட்பாளர்களாக பொதுஜன பெரமுன சார்பில் : 4 பேரின் பெயர்கள் பரிந்துரை
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு பேர் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களில் தம்மிக்க பெரேராவும் உள்ளடங்குவதாகவும் கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
''கட்சி என்ற ரீதியில் எதிர்வரும் தேர்தல்களில் மிகுந்த பலத்துடன் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
கட்சிகளுக்கு அனைத்து நாட்டு மக்களுக்கும் நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம் என்பதை கூற விரும்புகின்றோம்.
கட்சி என்ற ரீதியில் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.
மூன்று அல்லது நான்கு வேட்பாளர்கள் குறித்து நாங்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.'' என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.