இடைக்கால அரசாங்கத்தின் அரச தலைவராக சாலிய பீரிஸ் பரிந்துரைப்பு
இடைக்கால அரசாங்கத்தின் அரச தலைவர்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் அரச தலைவர் சட்டத்தரணியுமான சாலிய பீரிஸை தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு நியமித்து, இடைக்கால அரசாங்கத்தின் அரச தலைவராக நியமிக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாகாண ஆளுநர்களான மைத்திரி குணரட்ன, கீர்த்தி தென்னகோன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
அனைத்து தரப்பினரும் இணங்கக்கூடிய மற்றும் சுயாதீனமாக செயற்படக்கூடிய சாலிய பீரிஸை இடைக்கால அரசாங்கத்தின் அரச தலைவராக நியமிப்பது பொத்தமானது என நாட்டின் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், பொதுமக்களும் பரிந்துரைக்கின்றனர். என குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறக்கூடிய நபர்
அதேபோல் அரச அடக்குமுறை உக்கிரமடைந்து, நாடு ஆபத்தான நிலைமைக்குள் செல்லவிருந்த சந்தர்ப்பத்தில் அதனை தடுக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் பாரிய பங்களிப்புகளை செய்தனர்.
மக்கள் போராட்டத்தின் பாதுகாவலர்களாகவும் அனுரசணையாளர்களாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் செயற்பட்டது.
இதனால், அரச தலைவராக சாலிய பீரிஸை நியமிப்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெறக்கூடிய நபர், கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியும்.
அப்போது உண்மையான சர்வக்கட்சி அரசாங்கத்தை உருவாக்கி, போராட்டகாரர்கள் இணங்கக்கூடிய பொது இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் முன்னாள் ஆளுநர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.
