போரில் இல்லாத நாடுகளுக்கும் ஈரான் விதித்த நிபந்தனை! எதிரிகளுக்கு கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போர் அல்லாத நாடுகள் கட்டாயமாக ஈரானுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.
ஈரான் கரைகள் அல்லது தீவுகள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் எனவும் மேற்படி அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரசீக வளைகுடா மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து அணுகல் வழிகளும் கடற்படை கண்ணிவெடிகளால் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கும் பாரசீக வளைகுடா
அதன்போது, கரையிலிருந்து விடக்கூடிய மிதக்கும் கண்ணிவெடிகள் உட்பட பல்வேறு வகையான கடற்படை கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Image Credit: Business Insider
இதன்படி, ஹோர்முஸ் நீரிணை மட்டுமன்றி முழு பாரசீக வளைகுடாவே செயல்பாடுகளில் முடங்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என ஈரான் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.
ஈரானின் பதிலடி
மேலும், இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கான முழுப் பொறுப்பும் தாக்குதல் நடத்தும் தரப்பே எனவும் ஈரான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் ஈரானின் பதிலடி எச்சரிக்கைகள், மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை மிகவும் நெருக்கடியான நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |