இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே! நல்லூரில் நிறைவேறியது தீர்மானம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kiruththikan
இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனப்படுகொலை தீர்மானத்திற்கு பாராட்டு
அத்துடன் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கையின் இனப்படுகொலை தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, நீதி கிடைக்க வேண்டும் எனவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது .


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி