வட கொரியா மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கை..!
வட கொரியா தனது வேவுத் துணைக்கோளத்தை விரைவில் விண்ணில் செலுத்தப்போவதாக போவதாக ஜப்பானிடம் தெரிவித்துள்ளது.
இது புவியீர்ப்பு ஏவுகணை சார்ந்ததாக இருக்கலாம் என ஜப்பானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தனது முதல் இராணுவ வேவுத் துணைக்கோளம் ஏப்ரலுக்குள் தயாராகிவிடும் என வட கொரியா கடந்த டிசம்பரில் கூறியிருந்தது.
ஆய்வு
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அதை ஆய்வு செய்யும் படம் அண்மையில் வெளியாகியிருந்தது.
இதேவேளை, வேவுத் துணைக்கோளத்தைத் தயாரிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அதை விண்ணில் செலுத்த வட கொரிய தலைவர் அனுமதி வழங்கிவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
திட எரிவாயுவில் இயங்கும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் புவியீர்ப்பு ஏவுகணையை வட கொரியா அண்மையில் சோதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தற்போது வேவுத் துணைக்கோளம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
நெருக்கடியைச் சமாளிக்கத் தயாராகும் அதேசமயம், இது தொடர்பில் உரிய தகவல்களைச் சேகரித்து, ஆய்வு செய்து வருவதாகவும் ஜப்பான் கூறியுள்ளது.
