உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள்

Vladimir Putin Volodymyr Zelenskyy Kim Jong Un World
By Shalini Balachandran Aug 21, 2026 05:26 PM GMT
Report

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வடிம் ஸ்கிபிட்ஸ்கி (Vadym Skibitskyi) இதனை தெரிவித்துள்ளார்.

இந்த புதிய படையில் உக்ரைன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 400 ட்ரோன் இயக்குநர்கள் (Drone Operators) சேர்க்கப்பட்டிருப்பது உக்ரைனுக்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது

வடகொரிய வீரர்கள் 

ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டு வரும் நிலையில் ட்ரோன்களை இயக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த அலைவீச்சில் சேர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இவர்களது ட்ரோன்கள் உக்ரைன் எல்லைக்குள் உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என உக்ரைன் எச்சரித்துள்ளது.

உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள் | North Korea Sends Drone Operators To Russia

புதிதாக வந்துள்ள வடகொரியப் படைகள் பெரும்பாலானவை ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதில் 1,000 பொறியாளர்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்களும் (Engineers and Deminers) அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரிய வீரர்கள் உக்ரைனிய எல்லைக்குள்ளே நேரடியாகப் போரிடாமல், ரஷ்யாவின் பின்பகுதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் கூடுதல் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் மோதல் தீவிரம்: பின்வாங்கப் போவதில்லை என ஈரான் அதிரடி

ஹோர்முஸ் நீரிணையில் மோதல் தீவிரம்: பின்வாங்கப் போவதில்லை என ஈரான் அதிரடி

வடகொரிய வல்லுநர்கள்

செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் சந்திப்பின் போது மேலும் 50,000 வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷ்யா கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியா இதுவரை ரஷ்யாவிற்கு 150-க்கும் மேற்பட்ட KN-23 மற்றும் KN-24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் 120 ஏவுகணைகளை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள் | North Korea Sends Drone Operators To Russia

ஏவுகணைகளை இயக்குவதற்கு உதவ வொரோனேஷ் (Voronezh) பகுதிக்கு சுமார் 90 வடகொரிய வல்லுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்குப் பதிலாக ரஷ்யாவின் சக்திவாய்ந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தருமாறு வடகொரியா கோரியுள்ளதுடன் ஏற்கனவே Pantsir-S1 அமைப்பைப் பெற்றுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜோங் உன்னைக் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தென்கொரியாவுடனான கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளைக் குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த தீவிர இராணுவ ஒத்துழைப்பு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது! பெசெஷ்கியான் எடுத்துரைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025