வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்த வடகொரிய மாணவர்களுக்கு கொடூர தண்டனை (காணொளி)
தென்கொரியாவின் படங்கள் மற்றும் பாடல்களை பார்த்த வடகொரியாவின் இரண்டு சிறுவர்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையான தண்டனையை அளித்துள்ளது.
16 வயதான அந்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனையை அளித்துள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்றினை வடகொரியாவிலிருந்து வெளியேறிவர்ளுடன் தொடர்புடைய நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தென் கொரிய திரைப்படங்களை பார்த்ததாக
கே-பாப் எனப்படும் தென் கொரிய காணொளி பாடல்கள் மற்றும் திரைப்படங்களை பார்த்ததாகவும், பரப்பியதாகவும் இரண்டு சிறுவர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
பொதுவெளி அரங்கம் ஒன்றில்
இந்தக் காணொளியில், ஏறத்தாள 1000 மாணவர்கள் சுற்றி அமர்ந்திருக்கும் பொதுவெளி அரங்கம் ஒன்றில், இரண்டு மாணவர்கள் அரக்கு நிற அங்கி அணிந்து கையில் விலங்கு பூட்டப்பட்டு நிற்கிறார்கள்.
அவர்களுக்கு அனைவர் முன்னிலையில் இந்த தண்டனை வழங்கப்படுகிறது.
"வெளிநாட்டுக் கலாசாரம் இவர்களை மயக்கியுள்ளது. அவர்கள் வாழ்க்கை நாசமாவதற்கு அதுவே காரணமாகிவிட்டது" என அந்த இடத்தில் ஒரு அதிகாரி கூறுகிறார்.