அத்துமீறும் வடகொரியா: தென்கொரியாவை நோக்கிய நகர்வு
வடகொரியா, தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதி நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலை காணப்படுகின்ற நிலையில், தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுக்கு அருகில் வடகொரியா தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதுகாப்பு
அத்துடன், வட கொரியா, மஞ்சள் கடல் பகுதியில் உள்ள தென் கொரியாவுக்கு சொந்தமான Yeonpyeong மற்றும் Baengnyeong தீவுகளுக்கு இடையே கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தனது எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பதிலடி நிச்சயம்
அதுமட்டுமல்லாமல், வடகொரியாவின் இந்த அத்துமீறல் தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி வழங்கப்படுமெனவும் தென் கொரியா எச்சரித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதல்களுக்கு இடையில் உள்ள மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தென்கொரியா உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |