வடகொரியாவில் தன்னை பலப்படுத்துகிறார் கிம் ஜாங் உன் : சகோதரிக்கு கிடைத்த பதவி உயர்வு
வடகொரியாவில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது குடும்ப அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சகோதரிக்கு பதவி உயர்வை வழங்கி தன்னை பலப்படுத்தியுள்ளார்.
வடகொரியாவில் ஆளும் தொழிலாளா் கட்சியின் 9-வது மாநாடு, தலைநகா் பியாங்யாங்கில் அண்மையில் நடந்தது. இதில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அக்கட்சியின் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிம் யோ ஜாங்வுக்கு பதவி உயர்வு
இந்த நிலையில் ஆளும் கட்சி மாநாட்டில் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங்வுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி அமைப்பில் துணைத்துறை பணிப்பாரக இருந்த கிம் யோ ஜாங் முழுத்துறை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிம் யோ ஜாங் தனது சகோதரரின் நெருங்கிய துணைத் தலைவர்களில் ஒருவராகவும், ஆட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |