விக்னேஸ்வரன் முதலமைச்சராவதில் சிக்கல்நிலை
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran), வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வருவதனை எமது கட்சி ஆதரிக்காது என்கிறார் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam).
மாகாணசபை விவகாரம் மற்றும் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவதனை எமது கட்சி ஏற்றுக்கொள்ளாது.
விக்னேஸ்வரன் நாடாளுமன்றில் பணியாற்ற வேண்டும் என்றே மக்கள் வாக்களித்துள்ளனர். இதனால் அவர் நாடாளுமன்றில் ஆற்ற வேண்டிய பணிகளை கவனிக்க வேண்டும். அதனை பாதியிலே கைவிடக்கூடாது.
இதன் காரணமாக சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வருவதனை எமது கட்சி ஆதரிக்காது'' என்றார்.