வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ள நிர்வாக முறைகேடு!
வடமாகாண கல்வித் திணைக்களத்தின்(Northern Provincial Department of Education) மேலதிக மாகணக் கல்விப் பணிப்பாளர் த.உமாவின்(Uma) பதவி முத்திரை தலைகீழாக பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரின் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்திற்கே இவ்வாறு தலைகீழாக அவரது பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்
குறித்த கடிதத்தில் பதவி முத்திரையை பொறித்தவர் தலைகீழாக பெறிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் கடிதத்தை புதிதாக வரையாமல் தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரைக்கு மேலாக மீண்டும் பதவி முத்திரை பொறிக்கப்பட்டு அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிர்வாக முறைகேடுகள் இடம் பெறுவதாக பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டு வரும் நிலையில் கடிதத்துக்கு கூட ஒழுங்காக பதவி முத்திரை இடப்படாமை கல்வி அமைச்சு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரப்படுத்துவதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |