யாழில் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவி: நேரில் சென்று வாழ்த்திய காவல்துறை மா அதிபர்
வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலாவது இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 32வது இடத்தையும் பெற்ற பாலகிருஷ்ணன் வஜீனாவை வட மாகாண காவல்துறை மா அதிபர் வாழ்த்தியுள்ளார்.
இவர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமமான சாந்தை பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இவரது குடும்பமும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட ஒரு குடும்பமாக காணப்படுகின்றது.
வாழ்த்திய காவல்துறை மா அதிபர்
கல்வி கற்பதற்கு கூட அவரது வீட்டில் ஒரு மேசை இருந்திருக்கவில்லை. இவ்வாறான குடும்பப் பின்னணியிலேயே மாணவி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கான பாராட்டு விழா இன்றையதினம் சாந்தை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் திலக் சி.ஏ.தனபால குறித்த பகுதிக்கு நேரில் சென்று தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட காவல்துறை மா அதிபர், புதிதாக நியமனம் பெற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளார். அவர் தனது பதவிக்கு அப்பால் அங்கிருந்த மக்களுடன் மிகவும் சகஜமாக பழகுவதை அவதானிக்க முடிந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |