ரணிலை மீண்டும் அதிபராக்க வடக்கு மக்கள் தயார் - சிறிலங்கா அமைச்சரின் நம்பிக்கை

Manusha Nanayakkara Ranil Wickremesinghe President of Sri lanka Northern Province of Sri Lanka
By Jaso Jul 24, 2023 06:17 PM GMT
Report

சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் தேர்ந்தெடுக்க வடக்கிலுள்ள மக்கள் தயாராக உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டை ஒரே மாதிரியாக நடத்தும் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை வடக்கிலுள்ள மக்கள் பார்க்கின்றனர் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் இளைஞர்கள் ஆயுதமேந்த யார் காரணம்

ரணிலை மீண்டும் அதிபராக்க வடக்கு மக்கள் தயார் - சிறிலங்கா அமைச்சரின் நம்பிக்கை | Northern People Are Ready To Make Ranil President

1956 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தார்கள். தனிச் சிங்கள சட்டத்தை கொண்டுவந்து இணைப்பை ஏற்படுத்த இருந்த வாய்ப்பை இல்லாது செய்தார்கள். வெள்ளையர்கள் போன்று உடை அணிந்து வெளிநாடு சென்ற பண்டாரநாயக்க, நாட்டிற்கு தேசிய உடை அணிந்தே வந்தார்.சிங்கள மொழி பேச முடியாமலே அவர் வந்தார்.

தேசிய உடையை அணிந்தமை, எம்மை ஏமாற்றுவதற்கு.அதனை அன்றில் இருந்து வெவ்வேறு அரசியல்வாதிகள் பல்வேறு வகையில் பயன்படுத்தினார்கள்.

அதன் பிரதிபலனே வடக்கில் எமக்கு பிரச்சினை ஏற்பட்டது. வடக்கு இளைஞர்கள் ஆயுதமேந்தினர்.அதன் பிரதிபலனாக தெற்கிலுள்ளவர்களும் ஆயுதங்களை தூக்கினர்.எனினும் ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஒரே கொள்கையில் இருந்துகொண்டு அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவதற்கு அனைத்து மதத்தவர்களையும் சமமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததது.

இந்தியாவில் இருந்து திரும்பும்போது

ரணிலை மீண்டும் அதிபராக்க வடக்கு மக்கள் தயார் - சிறிலங்கா அமைச்சரின் நம்பிக்கை | Northern People Are Ready To Make Ranil President

அதிபர் ரணில் இந்தியாவில் இருந்து வருகைதரும் போது, 13 ஏ திருத்தத்தை கொண்டுவருவதாக கூறியுள்ளார்.அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்குமாயின், அதனை தயார் செய்யுமாறு தெளிவாக கூறினார்.

நாம் கடந்த வாரம் வடக்கில் இருந்தோம்.தற்போது சிறந்த பலன் கிடைத்துள்ளது.தெற்கிலுள்ள இளைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்பை வடக்கில் உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக காலியில் இருப்பதை போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்துவைத்தோம். அதுவே எமது நல்லிணக்க செயற்பாடு.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் தெரிவுசெய்வதற்கு  முன் நிற்கின்றனர். இந்த நாட்டை ஒரே மாதிரியாக நடத்தும் பிரிக்கப்படாத, பிரித்து நிர்வகிக்காத தலைவருடன் எதிர்காலத்தில் பணியாற்றுவதற்கு அவர்களுக்கு தேவை காணப்படுகின்றது.தேசிய ரீதியாக பரந்துபட்ட கோணத்தில் தலைவருடன் பணியாற்றுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் இன்று இணங்கியுள்ளனர்.

முஸ்லிம் மக்களை வீதியில் இறங்க முடியாத நிலைமை

ரணிலை மீண்டும் அதிபராக்க வடக்கு மக்கள் தயார் - சிறிலங்கா அமைச்சரின் நம்பிக்கை | Northern People Are Ready To Make Ranil President

முஸ்லிம் மக்களை எடுத்துக்கொண்டால், 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சி அமைந்த போது மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்தனர்.எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தி, முஸ்லிம் மக்களை வீதியில் இறங்க முடியாத நிலைமையை உருவாக்கினர்.

முஸ்லிம் மக்கள் வீதியால் நடந்து செல்லும் போது பாரிய பிரச்சினை மற்றும் சந்தேகம் ஏற்படும் நிலைமை உருவாக்கப்பட்டது.எனினும் நாம் நாடாளுமன்றத்தில் இது முஸ்லிம் மக்களின் செயற்பாடு அல்ல, அது ஒரு சில பிரிவினரின் தேவைக்காக நடத்தப்பட்ட சம்பவம் என்பதை தெளிவுபடுத்தினோம் என்றார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025