வடக்கில் கனமழை..! 40 மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Dharu
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட விளாவேடை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட விளை நிலங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பாலம்
இங்கு காணப்படும் பாதுகாப்பற்ற பாலத்தின் மூலம் வெள்ளம் பெருக்கெடுப்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பேக்குவரத்து செய்வதில் பெரும் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்