யாழில் ஹரிஹரனின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி : அனுமதி இலவசம்
தமிழர் தாயக பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றது.
முதலீடுகள் மாத்திரமின்றி, சமூக, கலை, கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், இலங்கை SLIIT நிறுவனத்துடன் கைகோர்த்து Northern Uni வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஊடக அனுசரணை
அந்தவகையில் NORTHERN UNI இன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கிலே இடம்பெறவுள்ளது.
இவ் இசை நிகழ்ச்சியானது ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடகத்தின் பிரதான அனுசரணையுடன், டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கிலே முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டும் முகமாக, northern Uniயின் உரிமையாளரான இந்திரனின் மனைவியும், தென்னிந்திய நடிகையுமான ரம்பா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
அத்தோடு, இந்த நிகச்சியில் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஈழத்து கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.