தேசிய மக்கள் சக்தி அரசில் வடபகுதி மக்கள்: அனுரகுமார திட்டவட்டம்
தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிரவாத போக்கற்ற மற்றும் இனவாதமற்ற தலைவர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
இனவாதமற்ற தலைவர்கள்
எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கை சேர்ந்தவர்களும் இடம்பெறவேண்டும் அத்தோடு தீவிரவாத போக்கற்ற மற்றும் இனவாதமற்ற தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயார்.
அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒருபகுதியாக வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி
மொழி மற்றும் காணி பிரச்சினைகளிற்கு தேசிய மக்கள் சக்தி தீர்வை காணும் அத்தோடு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்ய அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.
மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்.
உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |