இலங்கையில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறது
இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 1 முதல், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுகளுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு பொறுப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக நடவடிக்கைகள்
இலங்கைக்கான நோர்வே தூதரகம் என்ற முகநூல் பக்கம் மூடப்படவுள்ளதாக தெரிவித்துள்ள தூதரகம், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் பக்கத்தை பின்தொடருமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவுகளுடன் நடந்து வரும் தூதரக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் புதிய முகப்புத்தக பக்கத்தில் கிடைக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The Norwegian Embassy in Colombo will close on 31 July 2023. From 1 August, @norwayinindia will be responsible for Norway's bilateral relationship to Sri Lanka and the Maldives. This Twitter account will not be updated. We request you to follow @norwayinindia for updates.
— Trine Jøranli Eskedal (@NorwayAmbLK) July 24, 2023
இதேவேளை, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜோரன்லி எஸ்கெடல், தனது டுவிட்டர் கணக்கு(@NorwayAmbLK ) புதுப்பிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
