இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை
அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |