இங்கிலாந்தில் வாயை பிளக்கும் சம்பளத்தில் வேலை -தகுதியிருந்தால் விண்ணப்பிக்கலாம்
இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு பீல் கம்பிளீட் (Feel Complete) என்ற பெயரிலான ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் 18 வயது பூர்த்தியான நபர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வரும் மார்ச் முதல் 6 மாத கால பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 இலட்சம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு, அவர்களுக்கு முக்கிய தகுதியாக, தீவிர மோப்பம் பிடிக்கும் சக்தி இருக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது.
மனித கழிவுகளை மோப்பம் பிடித்தல்
அப்படி என்ன வேலையென்றால், மனித கழிவுகளை சிறந்த முறையில் மோப்பம் பிடிக்க வேண்டும். இதற்கான பயிற்சியை அவர்களுக்கு நிறுவனமே வழங்கும். அப்படி சிறந்த முறையில் மனித மலம் பற்றி மோப்பம் பிடித்து வல்லுனராக வரும் ஒருவரை நிறுவனம் தேர்ந்தெடுத்து, அதற்கான வேலையில் அந்நபரை சேர்த்து கொள்ளும்.
ஒரு நபரின் பொது சுகாதாரம் மற்றும் நலன் ஆகியவற்றை அடையாளம் காட்டும் விசயங்களில் ஒன்றாக அவரது மனித கழிவுகள் உள்ளன. அதனை பார்த்து, மோப்பம் பிடித்து, வல்லுனராக்க பயிற்சி அளிக்கப்படும்.
சிறந்த மூக்கு கொண்ட நபர்
இதற்காக 5 பேரை அந்நிறுவனம் தேடி கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி திட்டத்தில், அனைத்து நிலையிலான குடல் சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவை இடம் பெறுவதுடன், வேலைக்காக மோப்பம் பிடிக்கும் சிறந்த மூக்கு கொண்ட நபரையும் தேர்வு செய்ய உள்ளது.