பத்திரிகையாளருக்கு கடும் மிரட்டல்...! சீமான் மீது வழக்குப்பதிவு
Seeman
India
World
By Shalini Balachandran
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுச்சேரி வில்லியனூரில் நேற்று (23) நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த சீமான் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
பத்திரிகையாளர்
இதன்போது, சீமானிடம் எதிர் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் ஒருவரை அவர் ஒருமையில் பேசிய நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், கொலை மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி