கட்டுநாயக்கவில் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட மலேசிய பிரஜை...!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக போதை பொருளை கொண்டு வர முற்பட்ட வேளை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது நடவடிக்ககையை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஐந்து கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியா நாட்டை சேர்ந்த குறித்த நபர் அபுதாபிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |