இலங்கையில் குறைந்து செல்லும் குழந்தை மக்கள் தொகை : எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து
இலங்கையில் குழந்தை மக்கள் தொகை விகிதத்தில் கூர்மையான மற்றும் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குழந்தை மக்கள் தொகை விகிதம் 1946 இல் 40-42 சதவீதமாக (0-14 வயதுக்குட்பட்டவர்கள்) இருந்தது. 2024 இல், குழந்தை மக்கள் தொகை விகிதம் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பல்வேறு காரணங்கள்
பிறப்பு எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு, திருமண தாமதம் மற்றும் உயர்கல்வியில் அதிகரித்த பங்கேற்பு ஆகியவை குழந்தை மக்கள் தொகை குறைவதற்கு முக்கிய காரணங்களாகும். குழந்தை மக்கள் தொகையில் ஏற்பட்ட சரிவு எதிர்காலத்தில் தொழிலாளர் வழங்கல் குறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறுகிறது.

தொழிலாளர் சக்தியின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் விரிவாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் குரல்களை ஒடுக்க விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்று விடுங்கள் : பிரம்டன் நகரமேயர் சூளுரை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |