2025ஆம் ஆண்டுக்கான நாஸ்ட்ராடாமஸின் பிரம்மிக்க வைக்கும் கணிப்புகள்!
பிரான்சின் தீர்க்கதரிசியான நாஸ்ட்ராடாமஸின் 2025ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்தவகையில், இயற்கை பேரிடர்கள், விண்வெளி ஆய்வு முன்னேற்றங்கள், உலகளாவிய மோதல்கள், பொருளாதாரக் குழப்பம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி ஆகியவை இவரது கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்
16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தீர்க்கதரிசியான நோஸ்ட்ராடாமஸ், இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பிரபலமான நபராக இருக்கிறார்.
Les Prophéties என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட அவரது ரகசிய கணிப்புகள் குறிப்பிடத்தக்க உலக நிகழ்வுகளை முன்னறிவிப்பதாகக் கருதப்படுகின்றன.
அதன்படி, எதிர்வரம் 2025ஆம் ஆண்டுக்கான நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் குறித்து பார்க்கலாம்.
உலகளாவிய மோதல்
சக்தி வாய்ந்த உலக நாடுகளிடையே போர் அல்லது அமைதியின்மை ஏற்படலாம் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
போர் பற்றிய தீர்க்கதரிசனங்கள் புவிசார் அரசியல் பதட்டங்களின் சாத்தியத்தை தெரிவிக்கின்றன. எனவே 2025ஆம் ஆண்டில் உலகளாவிய போர் அல்லது அமைதியின்மை ஏற்படலாம்.
தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நாஸ்ட்ராடாமஸி உலகப்போர் குறித்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இயற்கை பேரிடர்கள்
சுற்றுச்சூழல் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில், அவரது தீர்க்கதரிசனங்கள் கடுமையான வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்களை பரிந்துரைக்கின்றன, இது தற்போதைய காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
2025ஆம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கம், வெள்ளம் ஆகியவை ஏற்படலாம் என்று அவர் கணித்துள்ளார். இது உலகளாவிய நிலப்பரப்புகளை மறுவடிவமைக்கலாம் என்று நம்பப்படுகிறது.
விண்வெளி ஆய்வில் முன்னேற்றங்கள்
விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் கணித்துள்ளார்.
விண்வெளி தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன், 2025ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரக் குழப்பம்
நாஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் நிதி நெருக்கடிகளைக் குறிப்பிடுகின்றன, பங்குச்சந்தை உறுதியற்ற தன்மை அல்லது குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார மாற்றத்தை சுட்டிக்காட்டலாம்.
நோஸ்ட்ராடாமஸின் சர்வதேச நிதி அமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தகூடும்.
தொழில்நுட்ப புரட்சி
2025ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடையும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
குறிப்பாக 2025ஆம் ஆண்டி AI, ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்கள் தொழில்களை மாற்றியமைக்கலாம்.
மேலும், 2025ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் குறித்து தீர்க்கதரிசியான நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |