உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் -ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு
G.C.E.(A/L) Examination
Ceylon Teachers Service Union
By Sumithiran
உயர்தர பரீட்சை விடைத்தாள்களை பகுதிகளாக திருத்துவது பெறுபேறுகளுக்கு பங்களிக்காது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கூறியதாவது: தமிழ் மொழி தேர்வு வினாத்தாள்களை மட்டும் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கப்பட்டாலும், அது முழுமைக்கும் நல்லதல்ல.
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில்
இதேவேளை, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் கல்வி அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (21) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ரசிக ஹந்தபாங்கொட ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி