அரசு கணக்குகளில் சொத்துகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை: அரசு கணக்கு தொடர்பான குழு
அரசு கணக்குகளில் கடன் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும், சொத்துகள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை என அரசு கணக்கு தொடர்பான குழுவிற்கு தெரியவந்ததுள்ளது.
2022ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்நாட்டில் பெறப்பட்டுள்ள மொத்தக் கடன் தொகை 27 டிரில்லியன் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் டபிள்யூ பி.சி.விக்ரமரத்ன தெரிவிக்கையில், "தற்போது, 31.12.2022 நிலவரப்படி, நிதிநிலை அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள நிதியல்லாத சொத்துக்கள் 02 டிரில்லியன் ஆகும், இருப்பினும், முழு திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட கடன்கள் (செலுத்தப்பட்ட கடன்கள்) மட்டுமே 31.12.2022 நிலவரப்படி 08 டிரில்லியனாக காட்டப்பட்டுள்ளது.
மொத்த சேகரிப்பு
இன்னும் 22 டிரில்லியனை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இது சொத்துக்கள் அல்ல மூலதனப் பற்றாக்குறை இந்தக் கணக்கில் உள்ள குழப்பம் இதுதான்.
எங்களிடம் சில கடன்கள் உள்ளன, சொத்துக்கள் இல்லை. அதுதான் பிரச்சினை. நாட்டின் சொத்துக்களின் மொத்த சேகரிப்பு எங்களிடம் இல்லை.” என்றார்.
மேலும் இது தொடரபில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன கூறுகையில், “இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது 08 பில்லியன் கடனாகப் பெற்றுள்ளோம், எங்களிடம் 02 பில்லியன் சொத்து இருக்கிறது என்று யாராவது சொன்னால் அதில் ஒரு குறை இருக்கிறது.
அதை சரி செய்ய வேண்டும். ஆகையால், சொத்துக்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம், அத்தோடு சொத்துக்களின் சரியான கணக்கை பொறுப்புகளுடன் நாட்டுக்கு வழங்குவோம்." என்றார்.