பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் கவலையடைய போவதில்லை : ரொஷான் ரணசிங்க தெரிவிப்பு!
இலங்கையில் உள்ள திருடர்களின் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்மை பதவி நீக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் கவலையடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பதவி நீக்கத்தை தொடர்ந்து, அமைச்சின் உறுப்பினர்களிடமிருந்து விடைபெற்று வெளியேறிய போதே, அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பதவி நீக்கம்
சிறிலங்காவின் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ரொஷான் ரணசிங்க இன்று பதவி நீக்கப்பட்டார்.
சில திருடர்களின் திட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் விளையாட்டுத்துறையில் உள்ள பிரச்சினைகள் நீண்ட காலம் தொடருமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவை அனைத்தும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுடன் நிறைவுக்கு வருமென ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சர்
சிறிலங்காவின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவபர் விளையாட்டு சங்கங்களுக்கேற்ப செயல்படாதிருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |