கோட்டாபயவுடனான பங்காளி கட்சிகளின் பேச்சு தோல்வி
colombo
meeting
Vasudeva Nanayakkara
gotabaya
By Sumithiran
கடந்த வாரம் அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளிக் கட்சிகள் மற்றும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று இரவு சந்தித்துள்ளார்.
எனினும் இந்தச் சந்திப்பில்“முக்கியமான எதுவும் பேசப்படவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சந்திப்பின் பின்னர் தெரிவித்தார்.
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் ராஜபக்சவை நிர்ப்பந்திப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று முன்னதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி