வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
Sri Lankan Peoples
Department of Motor Vehicles
By Dilakshan
இணைவழி ஊடாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறும் அமைப்பு தற்காலிகமாக சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி முதல் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதன்படி, இந்த சேவைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை செயலிழந்திருக்கும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த செயலிழப்பை சரிசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்